Home » பொது » கதி கலங்கவைக்கும் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசா!!!
கதி கலங்கவைக்கும் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசா!!!

கதி கலங்கவைக்கும் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசா!!!

கசகசா சில சமையல்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சாதரன மளிகை பொருட்கள் கூட வளைகுடா நாடுகளில் தடையில் இருக்கிறது. அதுதெரியாமல் எடுத்துவரும்போது நாம் பல கஸ்டங்களுக்கு ஆளாக்கப்படுகிறோம் சிறைக்கு தள்ளப்படுகிறோம். சமீப காலத்தில் துபாய் வளைகுடாவிற்கு கசகசா கொண்டு வந்த இந்தியர் ஒருவர் 20 வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், அதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். 20 வருடங்கள் சிறை தண்டனை கொடுக்குமளவு கசகசா கொடிய பொருளா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்தியர்களை பொருத்தமட்டில் கசகசா ஒரு பெரிய பிரச்சனைக்குரிய பொருளல்ல ருசி கூட்டும் மசால பொருளில் அதுவும் ஒன்று. ஆனால் வளைகுடா நாடுகளான துபாய் கத்தார் குவைத் ஓமான் சவூதி அரேபியா போன்ற அரபுநாடுகளுக்கு கசகசா போதைதரும் பொருள் அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது என்பது இப்போதுதான் தெளிவாக பலருக்கும் தெரியவந்துள்ளது.
“உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.
இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால் விதைப்பை பசுமை நிறத்தில் இருக்கும்போது… அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி… அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்… அதுதான் ஓபியம். ‘பாப்பி’ செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் ‘பாப்பி’ மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.” கசகசா ஒரளவுக்கு மேல் உண்டால் அதில் போதை ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்ட உண்மை ஆதலால் அதை போதை வஸ்துக்களுடன் அதாவது கஞ்சா அபீன் போன்ற கொடிய போதைப் பொருள்களுடன் கசகசாவையும் வளைகுடா நாடுகள் சேர்த்திருக்கிறார்கள் என்பது இந்த பிரச்சனைக்குப் பின் தெரிய வந்துள்ளது. மளிகைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டுச் செல்லும் அன்பர்கள் கவனமாக போதைத் தரக்கூடிய எந்த பொருளையும் எடுத்துச் செல்லாமல் இருப்பது நலன் மீறினால் சுங்கசோதனையில் மாட்டப்படும்போது அதனால் வாழ்க்கையே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிடும். கசகசா வளைகுடாவில் மட்டும் தடையல்ல சிங்கப்பூரில் 20 ஆண்டுகாலமாக தடையில் இருக்கிறது அதேபோல் மலேசியாவிலும் தடையில் இருக்கிறது ஆதலால் கவனமாக இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top