Home » உடல் நலக் குறிப்புகள் » தெரிந்து கொள்ளுங்கள்
தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்

* வெயிட் போடலியா?
வெயிட் போடலேன்னு, கேக், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களை இளம் வயதினர் சாப்பிடுவதுண்டு. இது பின்னாளில் கெடுதலாக அமையும். வயதுக்கு ஏற்ற எடை இல்லாவிட்டால், தானாக காட்டிக்கொடுத்துவிடும். அப்போது பசியெடுக்காது; சோர்வு வரும். அப்போது டாக்டரிடம் போய் “செக் அப்’ செய்வது தான் நல்லது. மற்றபடி, பாலாடைக்கட்டி, இனிப்பு தயிர், பருப்பு வகைகள், கடலைகள், பேரீச்சை வாழை, ஆப்பிள் போன்றவை சாப்பிட்டு வரலாம். அதுவே போதுமானது.
* பசியெடுக்கலியே…
சிலர் நன்றாக “உள்ளே’ தள்ளுவர்; ஆனால், பசியே எடுக்கலே என்று புலம்புவர். இதனால், உடல் எடை கூடுவதுடன், சர்க்கரை , பிபி.,கோளாறும் வந்துவிடும். சத்தான உணவுகளை சாப்பிடுவது தான் நல்லது. அதை விட்டு, கண்ட நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது, குறிப்பிட்ட பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது கெடுதல் தான்.
பசியெடுக்க ஒரே வழி உடற்பயிற்சி தான். வாரத்துக்கு நான்கு முறையாவது, தலா 40 நிமிடம் நடக்க வேண்டும். வண்டியை எடுக்காமல் நடந்து செல்லுங்கள்; பசியெடுப்பது மட்டுமல்ல, நல்லா தூக்கமும் வரும்.
* மூணு வேளை
இளம் வயதில் நன்றாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடனே கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிடலாம். மூன்று முறை, பிரதான சாப்பாட் டையும், இரண்டு முறை நொறுக்குத்தீனியையும் சாப்பிடலாம். அப்போது பிரதான சாப்பாட்டு அளவை குறைத்துக் கொள்ளலாம். காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி செய்தால், கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும்.
* மீனில் மட்டுமல்ல
ஒமேகா 3 கொழுப்பு ஆசிட் என்பது, உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருவது முதல், பல நன்மைகளை செய்கிறது. மீன் உணவில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது. சைவ உணவு பிரியர்களுக்கு இந்த சத்து இல்லாத உணவு இல்லாமல் இல்லை. ஆளி விதையை பவுடராக்கி, எண்ணெய் எடுத்து அதன் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதையை பவுடராக்கி தண்ணீரில் கலக்கி சாப்பிட்டு வரலாம். பாலில் கலந்து சாப்பிடலாம். சாலட்டிலும் பயன் படுத்தலாம். கீரை, முட்டைகோசு போன்வற்றிலும் இந்த சத்துக்கள் உள்ளன.
* பி.ஐ.எஸ்.,தான் ஆரம்பம்
சத்தான உணவு சாப்பிடாமல், எப்போதும் சாட், பிட்சா, ஐஸ்கிரீம், கூல் டிரிங்ஸ் ஆகிய வற்றை சாப்பிட்டு வந்தால், முதலில் வரும் கோளாறு, இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்’ (பி.ஐ.எஸ்.,)தான். குடலில் ஏற்படும் ஒரு வித எரிச்சல், அழற்சி தான் இது. இது பெரிய கோளாறில் கொண்டு விடும். அதனால், முதலிலேயே கண்டுபிடித்து சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்துள்ள கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; ஜூஸ் சாப்பிடுவதை விட, பழங்களை சாப்பிட வேண்டும். பிளாக் டீ, லெமன் ஜூஸ் குடிக்கலாம்; ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
* பூண்டு எதுவரை…
பூண்டு பற்றி சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் புரியாத புதிராகத்தான் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதை உணவில் சேர்த்துக்கொண்டால், பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால், கோளாறு வந்த பின் அதை அதிகமாக பயன்படுத்துவது பயனளிக்காது என்கின்றனர். ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. ஆனால், வந்த பின் மருந்து தான் நல்லது; ஓரளவு பூண்டு பயன்படுத்தலாம் என்பது தான் நிபுணர்களின் லேட்டஸ்ட் ஆய்வு முடிவு.
* கோதுமை – மைதா
கோதுமை – மைதா எது நல்லது என்று தெரியுமா? கோதுமையில் மேல் இழை தான் நார்ச்சத்து நிறைந்தது; உள் இழையில் ஸ்டார்ச் சத்து உள்ளது. கோதுமையில் இரண்டு இழைகளும் இருப்பதால், அதன் மூலம் வைட்டமின் “பி’ காம்ப்ளக்ஸ், கனிம சத்துக்கள் கிடைக்கின்றன. மைதாவில், இவை நீக்கப்படுவதால், 80 சதவீத நார்ச்சத்து, 20 சதவீத ப்ரோட்டீன் நீக்கப்படுகிறது.
* மலட்டுத்தன்மைக்கும்
இளம் வயது பெண்களின் மோகம், இப்போது வாசனை திரவியங்களில் தான் உள்ளது. உடலை கமகமக்க செய்ய என்னவெல்லாம் சந்தையில் புதிதாக வந்திருக்கிறதோ, அவற்றை வாங்கி உடலில் எந்த முக்கிய பாகத்திலும் “ஸ்ப்ரே’ செய்வது வாடிக்கையாகி விட்டது. முக்கிய உறுப்புகள் அதனால் பாதிக்கப் படுகிறது என்பதை உணருவதில்லை. இதன் உச்சகட்டம் எது தெரியுமா? திருமணம் ஆனதும் மலட்டுத்தன்மை தெரியவரும் போது தான்.
* பிளாக் டீ ஏன்
அதென்ன பிளாக் டீ… ? கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. வாங்கி குடித்துத்தான் பாருங்கள். அதனால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோய் அண்டவே அண்டாது. சர்க்கரை நோய் வராமல் தடுக்க உடலில் உள்ள கணையத்தில் இன்சுலின் சீராக சுரக்க வேண்டும். அது தான் சர்க்கரை அளவை சீராக்கும். ரத்தத்தில் சேர விடாது. இந்த வேலையை பிளாக் டீயில் உள்ள, திப்ளாவின்ஸ், தியாருபிகின்ஸ் ஆகிய ரசாயன கலவைகளும் செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top