Home » விவேகானந்தர் (page 5)

Category Archives: விவேகானந்தர்

சிகாகோ சொற்பொழிவுகள் – நிறைவு நாள் உரை

சிகாகோ சொற்பொழிவுகள் – நிறைவு நாள் உரை

செப்டம்பர் 27, 1893 சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார். இந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. ... Read More »

சிகாகோ சொற்பொழிவுகள் – புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு

சிகாகோ சொற்பொழிவுகள் – புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு

செப்டம்பர் 26, 1893 நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ... Read More »

சிகாகோ சொற்பொழிவுகள் – மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று

சிகாகோ சொற்பொழிவுகள் – மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று

செப்டம்பர் 20, 1893 நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. ... Read More »

சிகாகோ சொற்பொழிவுகள் – இந்து மதம்

சிகாகோ சொற்பொழிவுகள் – இந்து மதம்

செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. ... Read More »

சிகாகோ சொற்பொழிவுகள் – நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?

சிகாகோ சொற்பொழிவுகள் – நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?

செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், ‘நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் ... Read More »

சிகாகோ சொற்பொழிவுகள் – வரவேற்புக்கு மறுமொழி

சிகாகோ சொற்பொழிவுகள் – வரவேற்புக்கு மறுமொழி

செப்டம்பர் 11, 1893 அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை ... Read More »

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார். * ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள். * உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். * தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு ... Read More »

சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு!!!

சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு!!!

விவேகானந்தர் பார்வையில் சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு:- ஓர் ஆணுக்கு இயல்பாகவே கிடைக்கின்ற கல்வி, ஆன்மிகம், வீரம், வேலை, தொழில் இவை எல்லாமே பாகுபாடின்றி பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக பெண்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார். ‘எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள். இவ்வுலகில் தன்னலம் சிறிதும் அற்ற, உண்மையான அன்பு ஒரு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அன்பினால் அவள் எப்போதும் துன்புற்றுக் ... Read More »

மாணவனின் ஆசை!!!

மாணவனின் ஆசை!!!

ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடையே வருங்காலத்தில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்…. ஒரு மாணவன் தான் மருத்துவராக வேண்டும் என்றான் , இன்னொரு மாணவர் வக்கீல் ஆக வேண்டும் என்றான் ,,, இப்படி ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய ஆசைகளை சொல்லி வந்தனர். ஒரு மாணவன் மட்டும் நான் ஒரு குதிரைவண்டிக்காரனாக ஆக வேண்டும் என்றான் , இதனை கேட்ட ஆசிரியருக்கோ அதிர்ச்சி ,,, என்ன உளறுகிறாய் என்று கேட்டு திட்டிவிட்டார். மாலை பள்ளி முடிந்ததும் ... Read More »

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன்,ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள்.  நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன. நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம். இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும். ... Read More »

Scroll To Top