Home » விவேகானந்தர் (page 3)

Category Archives: விவேகானந்தர்

9/11-க்கு முன்பே 9/11 இருந்தது!

9/11-க்கு முன்பே 9/11 இருந்தது!

செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பிறகு அந்தத் தேதியை அமெரிக்கப் பாணியில் 9/11 என்று குறிக்கும் எண் மிகவும் பிரபலம். பயங்கரவாதத்தின் குறியீடாகவே மாற்றப்பட்டு அமெரிக்காவைத் தாக்கியவர்களை உலகப் பொது எதிரிகளாகக் கட்டமைக்கும் பிரச்சாரம் ஊடக வலுவுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதே நாளில், சரியாக 108 ஆண்டுகளுக்கு முன் வேறொரு தகர்ப்பும் அதே அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டது. வேறொரு குறியீடும் உருவாக்கப்பட்டது. அது நடந்து இன்றோடு சரியாக 121 ஆண்டுகள் ஆகின்றன. நிகழ்த்தியவர் விவேகானந்தர். ... Read More »

கல்வி – ஒரே தீர்வு

கல்வி – ஒரே தீர்வு

கல்வி வாழ்வே, இன்றைய உலகின் தேவை! என்றார் சுவாமி விவேகானந்தர். நாம் கல்வியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சுவாமிஜி பல சொற்களில் பல இடங்களில் பல வார்த்தைகளில் எடுத்துச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அதில் நாம் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம். அறிவு – மனிதனிடம் ஏற்கனவே உள்ளது!       நியூட்டன் புவி ஈர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகிறோம். அந்தக் கண்டுபிடிப்பு ஒரு மூலையில் உட்கார்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டா இருந்தது? அது அவரது மனதில் இருந்தது. ... Read More »

தொண்டு செய்வதே வாழ்வின் நோக்கம்

தொண்டு செய்வதே வாழ்வின் நோக்கம்

கிறிஸ்துவ மதத்தை உலகின் பெரிய மதமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அனைத்து மதப் பிரிவுகளையும் சமத்துவமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும் அமெரிக்காவில் உலக மதங்களின் பாராளுமன்றம் என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை 1893-ல் ஏற்பாடு செய்தது. அந்த நேரத்தில் விவேகானந்தர் சென்னையில் இருந்தார். பச்சையப்பன் பள்ளியில் ஆசிரியரான அவரது நண்பர் அளசிங்கர் அமெரிக்க மாநாட்டுக்கு விவேகானந்தர் போகவேண்டும் என்றார். விவேகானந்தர் சம்மதித்தார். ஏதேனும் ஒரு மதப் பிரிவின் பிரதிநிதி என்ற சான்று இருந்தால்தான் ... Read More »

கல்வியே வழி!

கல்வியே வழி!

மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி. கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றார் ஒளவையார். கல்வி கல்லாதவர் மிருகத்துக்கு சமம். கல்வி கற்றால் எங்கு சென்றாலும் நமக்கு மதிப்பு உண்டு. ஆனால் சாதாரணமான கல்வியை சுவாமி விவேகானந்தர் எதிர்பார்க்கவில்லை. ஒழுக்கக் கல்வியுடன் கூடிய ஆன்மிகக் கல்வியைத் தான் சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்தார். அத்தகையக் கல்வி தான் ஒரு மனிதனை உருவாக்கும். கற்க கசடற…       கல்வியை ‘கற்க கசடற’ என்றார் வள்ளுவர். கல்வியானது ஒரு மனிதனை ... Read More »

கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்

கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றில் சிறந்த உரையாகக் கருதப்படுகிறது. 121 ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் சிகாகோ சிறப்புரை அன்றாட வாழ்க்கையில் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய அறிவுரையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் வெள்ளிவிழா மாநாடு வாஷிங்டன் மாகாணம் பால்டிமோரில் நடந்தது. அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. மூன்று நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. சில இடங்களுக்குச்சென்று பார்ப்பதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு ... Read More »

சுவாமி விவேகானந்தரின் அறிவுரை

சுவாமி விவேகானந்தரின் அறிவுரை

நல்ல உற்சாகத்துடன் திகழுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காக இறைவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நம்புங்கள். அவற்றை நாம் செய்தே தீருவோம். நம்பிக்கைக் கொள்ளுங்கள்      உலக வரலாறு என்பது தன்னம்பிக்கை உடைய சிலரின் வரலாறே ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலம் அங்குள்ள மக்களைப் பொறுத்தே உள்ளது. மக்கள் நல்லவர்களா, அறிவாளிகளா, திறமைசாலிகளா என்பதை பொறுத்தே அந்நாட்டின் எதிர்காலம் அமையும். அதனால் தான் சுவாமிஜி ‘சிறந்த மனிதனை உருவாக்குவதே என் பணி’ என்றார். இன்றையப் பிரச்னைகளுக்கு நாம் தான் ... Read More »

ஆசார்யர் விவேகானந்தர்

ஆசார்யர் விவேகானந்தர்

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள்  ‘ஜெய் ராதே பிரேமமயீ. நரேன் உலகிற்குப் போதிப்பான்’ என்று கைப்பட எழுதி சுவாமிஜியின் ஆசார்யத்துவத்தை சாசனம் செய்தார். சாஸ்திரங்களின் கருத்துகளையும் விதிகளையும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடித்து, தற்கால மக்களுக்கு ஏற்றபடி அளித்து மக்களை உயர்த்துபவரே ஆசார்யர். “நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம் சக்திஞ்ச தத்புத்ர பராசரம் ச வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்” -என்பது நாம் போற்றும் ஆசார்ய பரம்பரை. பின் ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமத்வர், ஸ்ரீசைதன்யர், ஸ்ரீராமகிருஷ்ணர் என ஆசார்யர் பரம்பரை ... Read More »

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்

மேலைநாடுகளிலிருந்து வெற்றித்திருமகனாகத் தாய்நாட்டிற்குத் திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வீடும் நாடும் நலம்பெறத் துறவிகள் நடத்தக்கூடிய ஒரு சங்கம் தோற்றுவிக்க மனம் கொண்டார். சமுதாயத்தில் மகிழ்ச்சி இருந்தாலொழியத் தனிமனித மோட்சம் உபயோகமற்றது என்றும் கருதினார். ஆனால், சக துறவி யோகானந்தர், சமூக சேவை வீடு பேறு பெற உதவாது. சமூக சேவையை முன் வைத்தால், தாம் சங்கத்தில் இணைய முடியாது என்றும் சமூகசேவையை ஆன்மிகத்துடன் தொடர்பு படுத்துவது கிறிஸ்து மதத்தினர் செய்வது, இதை ... Read More »

நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!

நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!

ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், அழியாத பேரின்பத்தை குழந்தைகள். அப்படியா? இது உண்மையா? உண்மை என்றால் நாம் ஏன் அதனை உணரவில்லை? சுவாமி விவேகானந்தர் கூறும் கதை ஒன்றைக் காண்போம். ஓர் அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் ஆட்டு மந்தை ஒன்று இருந்தது. அவன் தினந்தோறும் மேய்ச்சலுக்காக ஆட்டுமந்தையைக் காட்டுக்கு ஓட்டிச் செல்வான். மாலையில் ... Read More »

கவியோகி சுத்தானந்த பாரதியாரும் ராமகிருஷ்ண இயக்கமும்

கவியோகி சுத்தானந்த பாரதியாரும் ராமகிருஷ்ண இயக்கமும்

கவியோகி சுத்தானந்த பாரதியாரின் (1897 – 1990) ஆன்மிகப் பயணத்தில் அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாடு 1910-லேயே தொடங்கிவிட்டது. சிவகங்கை ஸ்ரீ ராமகிருஷ்ண – விவேகானந்த சங்கத்தில் அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாடு தோற்றம் கொண்டது. 28.1.1985-இல் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட பின்வரும் கருத்து, அவருடைய ராமகிருஷ்ணர் இயக்க ஈடுபாட்டை விளக்க வல்லது. சிவகங்கை ராமகிருஷ்ண மடம் எனது தவ நிலையமாயிருந்தது – (1910-1914). அங்கே உபநிஷத்துப் பாராயணம், காலை – மாலை முறையாக ... Read More »

Scroll To Top