Home » விவேகானந்தர் (page 10)

Category Archives: விவேகானந்தர்

ராஜ யோகம் பகுதி – 4

ராஜ யோகம் பகுதி – 4

மனித உடலில் இந்தப் பிராணனின் நன்கு புலனாகும். வெளிப்பாடு நுரையீரல்களின் இயக்கமாகும். அது நின்று விட்டால் உடலில் உள்ள மற்ற சக்தி வெளிப்பாடுகள் எல்லாம் உடனே நின்றுவிடுகின்றன. இந்த இயக்கம் நின்றாலும் உயிர் வாழ்வதற்கான பயிற்சி பெற்ற சிலர் இருக்கின்றனர். பூமியில் தங்களைப் புதைத்துக் கொண்டு, சுவாசிக்காமலே பல நாட்கள் வாழ்பவர்கள் உள்ளனர். சுட்சுமத்தை அடைய தூலத்தின் உதவி வேண்டும். இவ்வாறு மெள்ளமெள்ளச் சென்று மிக நுண்ணியதை அடைய வேண்டும். உண்மையில் நுரையிரல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் பிராணாயாமம். ... Read More »

ராஜ யோகம் பகுதி-3

ராஜ யோகம் பகுதி-3

பிராணன்: பலர் நினைப்பதுபோல், பிராணாயாமம் என்பது சுவாசத்தைப் பற்றியது அல்ல. சுவாசத்திற்கும் பிராணாயாமத்திற்கும் தொடர்பு இருந்தாலும் அது மிகக் குறைவே. உண்மையான பிராணாயாமத்தை நாம் சென்றடைவதற்கான பல பயிற்சிகளுள் சுவாசமும் ஒன்று, அவ்வளவுதான். பிராணாயாமம் என்றால் பிராணனைக் கட்டுப்படுத்துதல். இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி, பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருளாகவும், ... Read More »

ராஜ யோகம் பகுதி-2

ராஜ யோகம் பகுதி-2

மனத்தின் ஆற்றல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தியதால்தானே உலகிலுள்ள அறிவை மனிதன் பெற்றான், எவ்வாறு தட்ட வேண்டும், தேவையான <உந்துதலை எப்படி அளிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால் உலகம் தனது ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின் மூலமே கிடைக்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். இதுதான் ரகசியம். மனத்தைப் புறப்பொருட்களின்மீது குவிப்பது எளிது. இயல்பாகவே மனம் ... Read More »

ராஜ யோகம் பகுதி-1

ராஜ யோகம் பகுதி-1

நமது அறிவு எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனுமான அறிவிற்கும் அனுபவமே அடிப்படை. அனுமான அறிவில், நாம் சாதாரண அறிவிலிருந்து பொது அறிவிற்கோ பொது அறிவிலிருந்து விசேஷ அறிவிற்கோ செல்கிறோம். நிச்சய விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றுள் உள்ள உண்மையை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். ஏனெனில் அது ஒவ்வொருவருடைய தனி அனுபங்களை ஒத்திருக்கிறது. தான் கூறும் எதையும் நம்புமாறு விஞ்ஞானி சொல்வதில்லை. அவன் தனது சொந்த அனுபவங்களிலிருந்து சில முடிவுகளைக் கண்டறிந்துள்ளான். ஆராய்ந்த பின்னரே அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு அவன் ... Read More »

பல்சுவை!!!

பல்சுவை!!!

கவலைப்பட வேண்டாம் பெரிய மரத்தின் மீதுதான் புயற்காற்று மோதுகிறது: கிளறிவிடுவதனால் நெருப்பு மேலும் நன்றாக எரிகிறது; தலையில் அடிபட்ட பாம்பு படமெடுக்கிறது என்று இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். நெஞ்சுபுண்பட்டு வேகும்போதும் துன்பப் புயல் நம்மைச் சுற்றி நாலா புறங்களிலும் வீசும்போதும் இனி வாழ்க்கையில் ஒளியையே காண முடியாதா என்று தோன்றும்போதும். நம்பிக்கையும் துணிவும் கிட்டத்தட்ட அறவே நம்மை விட்டு அகன்று விட்ட போதும் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆன்மிகப் புயல் சூழ்ந்த நிலையின் நடுவில்தான் பிரம்மத்தினுடைய ... Read More »

நமது தாய்நாடு!!!

நமது தாய்நாடு!!!

இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.சமுதாயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும், எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தொய்மாகவும் , பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம் பலாத் காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய ... Read More »

மக்களின் தொண்டே மகேசன் தொண்டு!!!

மக்களின் தொண்டே மகேசன் தொண்டு!!!

ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு, அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும்.இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும்…… இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில், வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு ... Read More »

விவேகானந்தரின் அமுத மொழிகள்!!!

விவேகானந்தரின் அமுத மொழிகள்!!!

விவேகானந்தரின் அமுத மொழிகள்  மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை ... Read More »

ஊக்கம்!!!

ஊக்கம்!!!

ஊக்கம் ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே: அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். ஒரு காசு பேணின் இரு காசு தேறும். கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் ... Read More »

விவேகானந்தரின் பொன் மொழிகள்

விவேகானந்தரின் பொன் மொழிகள்

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” “உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!” “நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.” “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!” “கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.” “உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் ... Read More »

Scroll To Top