Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » நாஸ்கா கோடுகள் – புரியாத புதிர்
நாஸ்கா கோடுகள் – புரியாத புதிர்

நாஸ்கா கோடுகள் – புரியாத புதிர்

இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது.

பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திர்க்கும் நாஸ்கா பாலைவனதிலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவேளிகளுக்கிடையே  400 கி.மீ., சுமார்  தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான மனைகொடுகள் அவை. 1994 ல் “உலக தொல்லியல் பாரம்பரிய தளம்” என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

(குரங்கைப்போன்று அமைந்துள்ள கோடுகள்)
(பிரமிட்போன்று அமைந்துள்ள கோடுகள்)
(மனிதனின் கைகள் போன்று அமைந்துள்ள கோடுகள்)
(சிலந்தி போன்று அமைந்துள்ள கோடுகள்)
(பாடும்பறவை போன்று அமைந்துள்ள கோடுகள்)
( நாய் போன்று அமைந்துள்ள கோடுகள்)

நாஸ்கா கோடுகள் 1927 விமானத்தில் இருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.அறிவியலாளர்கள் இவற்றை நாஸ்கா கலாசார மக்களால் கி.பி.400 மற்றும் கி.பி.600 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

பலநூறு விலங்கு,பறவை,தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும் இந்த நாஸ்கா மனைகொடுகளை ஒரு சாரர் இவை விவசாயிகள் உருவாகியவை என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்ப்படுத்தப்பட்டவை என்று கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டது? யாரால் வரையப்பட்டது? அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன? அவை நமக்கு உணர்த்துபவை யாவை?

இம்முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போரடிக்கொண்டிருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top