Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கயோலா – சபிக்கப்பட்ட தீவு
கயோலா – சபிக்கப்பட்ட தீவு

கயோலா – சபிக்கப்பட்ட தீவு

இத்தாலி நாட்டின் நேப்ல்ஸ் இல் உள்ள ஒரு சிறு தீவுதான் இந்த கயோலா ! நேப்ல்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் இந்த தீவை சபிக்கப்பட்டது என்று கூறுகின்றனர் . அதற்கு பல காரணங்களையும் கூறுகின்றனர் . இந்த அழகான தீவிற்கு பின் பல மர்மங்கள் உள்ளதாம் .

Cursed Island of Gaiola
இந்த தீவின் முதலாளிகள் எல்லாம் அற்ப ஆயுளில் இறந்து விடுவதால் இந்த மக்கள் இதை கண்மூடித்தனமாக நம்புகின்றனர் !

1920 களில் சுவிஸ் ஹான்ஸ் பௌன் ஒரு தரை விரிப்பில் சுருட்டப்பட்டு இறந்து கிடந்தார் . சிறிது நேரம் கழித்து அவரின் மனைவி அருகில் உள்ள கடலில் மூழ்கி இறந்தார் .

Cursed Island of Gaiola

இதற்கு அடுத்து இந்த தீவை வாங்கிய ஜெர்மன் ஓட்டோ க்ருன்பக் தீவின் வில்லாவில் வசிக்கும் போது மாரடைப்பால் இறந்தார் அதுவும் சிறு வயதில் !

அடுத்த உரிமையாளர் மிகப்பெரிய தொழில் அதிபர் மௌரிசே-ய்வேஸ் சாண்டோஸ் . இவர் பைத்தியம் பிடித்து மனநல காப்பகத்தில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார் !

இவருக்கு பிறகு இதை வாங்கியவர் ஒரு ஜெர்மன் இரும்பு தொழிற்சாலை அதிபர் . இதை வாங்கியவுடன் அவரின் நடவடிக்கைகள் மாறியது . அவரின் மொத்த சொத்தும் அவரின் இந்த மாற்றத்தால் அழிந்தது !

Cursed Island of Gaiola
அடுத்து வாங்கிய ஜியானி அக்னெல்லி , அவரின் பெரும்பாலான உறவினர்களை மரணத்தின் பிடியில் குடுத்தார் . பிறகு பால் கெட்டி என்பவர் வாங்கினார் . வாங்கிய பின் அவரின் பேரனை யாரோ கடத்தினார்கள் .
Cursed Island of Gaiola
சமீப கால நிகழ்வு 2009 இல் நடந்தது . பிரான்கோ அம்ப்ரோசியா மட்டும் அவரின் மனைவி ஜியோவன்னா சாக்கோ இருவரும் இந்த தீவின் எதிரில் உள்ள ஒரு வில்லாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கொலை செய்ய பட்டனர் .

Cursed Island of Gaiola
இது போன்று இன்னும் நிகழ்வுகள் ஏராளம் !

Cursed Island of Gaiola
இவை அனைத்தும் தற்செயலாக கூட இருக்கலாம் ! இருந்தாலும் இந்த தீவின் அருகில் இருக்கும் மக்களுக்கு உண்மை தெரியும் வரையில் , இவை அனைத்தும் புரியாத ஒரு புதிராகவே இருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை !

Cursed Island of Gaiola

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top