அந்த யானையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு சிலகாலம் படுத்திருந்த பாரதி பின்பு உடல்நலம் தேறி பணிக்குச் சென்றார். அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவில் அவ்வூர் வக்கீல் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா? “மனிதனுக்கு மரணமில்லை” என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார். அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் அப்போதைய காங்கிரஸ்காரர். ... Read More »
மாத்தியோசிங்க!!!
March 10, 2017
எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, அதில் சின்னஞ்சிறு சறுக்கல் வந்தால்கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும். வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்குவதைவிட, நாமே தேடிப்போய் ... Read More »
அஞ்சறை பெட்டிய கண்டா, அஞ்சி ஓடும் நோய்கள்!!!
March 10, 2017
அஞ்சறை பெட்டி! தினந்தோறும் நாம் சமையல் அறையில் பயன்படுத்தி வரும் நறுமணப் பொருட்கள் ஆகும். இது, சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தையும் கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்யும் தன்மை வாய்ந்ததும் ஆகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் நமது தமிழ் காலச்சார உணவுகளே பல நோய்களுக்கு மருந்துகளாக பயன் தரும். அதில் முக்கிய பங்கு வகிப்பவை அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்கள். மஞ்சள் நறுமணப் பொருட்களில் முக்கிய ... Read More »
இன்னா செய்தாரை ஒறுத்தல்!!!
March 10, 2017
ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர். அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார். அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் ... Read More »
ஒன்று பட்டால் வாழ்வு!!!
March 9, 2017
ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது…எல்லா உறுப்புகளும் ‘வயிறை’விரோதியாக்கின. அப்போது கைகள் சொன்னது ‘நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்…ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது’என்றன.. உடனே கால்கள்..’நாங்கள் மட்டும் என்ன…இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்…ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது’என்றன.. தலை குறுக்கிட்டது…’நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது ‘என்றது. வாயோ…நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது. ... Read More »
புகழ்ச்சியும் ஒரு போதை!!!
March 9, 2017
புகழ்ச்சியும் ஒரு போதைப் பொருள்தான் – வளர்க்கும் (அ) வீழ்த்தும் சிலரை புகழுக்காய் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. சிலருக்கு தானாய் அமைகின்றது. சிலர் அதனைத் தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். புகழ்ச்சியாய் இருந்தாலும் அல்லது இகழ்ச்சியாய் இருந்தாலும் கூட அதில் நமக்கு நன்மையைத் தரக்கூடியவற்றின் வினையூக்கியின் மீதே நம்பார்வை அமைதல் வேண்டும். “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ” அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் ... Read More »
இரைப்பை கோளாறுகள்!
March 9, 2017
முன்பு போல இந்த அறிகுறிகளும், பழக்கவழக்கங்களும் இருந்தால் தான், இந்த நோய் வரும் என கூறுவதற்கு இல்லாமல். ஏதோ ஒரு காரணத்தினால் அனைவருக்கும் சில நோய்கள் ஏற்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு எங்கேயோ கேள்விப்பட்டவை என இருந்த நோய்கள் எல்லாம். இப்போது, நம் கண்முன் வாழும் அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு உள்ளதை நாம் காணாமல் இல்லை. கால நிலை மாற்றத்தினாலோ, நமது வாழ்வியல் முறை மாற்றத்தினாலோ இவை ஏற்படுகின்றன. அப்படி தான் இப்போது இரைப்பை கோளாறுகள் காரணமாக ... Read More »
ஒளவையின் பாடலில் திருக்குறள்!!!
March 9, 2017
ஒளவையின் பாடலில் திருக்குறள் விளக்கம் திருக்குறள் தமிழர் பண்பாட்டின் பிழிவாகும். குறள் மேன்மேலும் பொருள் சிறக்குமாறு, “தேடல்’ உத்திக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பலர், ஒரு குறளுக்கு வெவ்வேறு பொருள் காண முயல்கின்றனர். குறளுக்குப் பொருள் தேடும்பொழுது, அது தோன்றிய சமுதாய நிலையும், சங்க இலக்கியப் பின்புலமும் தெரிந்திருத்தல் தெளிவு தரும். “”தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” (236) இதற்கு, “பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; புகழ் இலாதார் பிறத்தலைவிடப் பிறவாமையே நன்று’ என ... Read More »
எந்த தொழில் தொடங்கினாலும்!!!
March 8, 2017
எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை 1. அம்மா அப்பாவிடம் கடன் வாங்காதே. 2. முதலீடும் முழுவதும் கடன் தொகையாக இருக்ககூடாது. 3. தொழிலில் இருந்து நீ விடுபடும் வரை அல்லது சாகும் வரை உழை உழை உழை. 4. எந்த தருணத்திலும் உன் தொழில்லுக்கு உதவும் வாடிக்கையாளர், வெண்டர்கள் மீது கோபம் கொள்ளாதே. 5. நெகிழ்வு தன்மையை கடைபிடி. 6. பணத்திற்காக தொழில் செய்யாதே. 7. சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிலை செய்யாதே. 8. போட்டியாளரை ... Read More »
ஓலைச்சுவடி எழுதப் பயன்படும் மரம்!!!
March 8, 2017
ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம் ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப்பெரிய ... Read More »