Home » சிறுகதைகள் » முல்லாவின் கதைகள் (page 2)

Category Archives: முல்லாவின் கதைகள்

முல்லாவின் கதை

முல்லாவின் கதை

முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது. இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர். முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி விழுந்தது. உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார். ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர், “முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்றார். “அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் ... Read More »

முல்லாவின் கதை

முல்லாவின் கதை

ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத் திட்டமிட்டான். நிச்சையமாக முல்லாவை ஏமாற்றி ஒரு பெருந்தொகையினை கடனாக வாங்கி வருவதாக பலரிடம் மார்தட்டிக்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக செயற்படத் திட்டமிட்டான். முல்லா தன்னை நம்பி பெருந்தொகையினைக் கொடுக்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் தன்மீது நம்பிக்கை ஏற்படுவதற்காக ஒரு நாடகம் நடிக்க எண்ணினான். ஒருநாள் அவன் முல்லாவிடம்ட சென்றான் “முல்லா அவர்களே ... Read More »

முல்லாவின் கதை

முல்லாவின் கதை

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற வாரம் ... Read More »

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்!

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்!

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் ... Read More »

அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு….

அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு….

ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் ... Read More »

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்…

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்…

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன் ? என ஒரு சந்தேகத்தைக் கேட்டார். நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன் ? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரும்பு ... Read More »

எல்லோரும் சோம்பேறிகள்….

எல்லோரும் சோம்பேறிகள்….

சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று. ... Read More »

எதிர்கால வாழ்க்கை….

எதிர்கால வாழ்க்கை….

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் ... Read More »

முள்ளங்கியும் முல்லாவும்

முள்ளங்கியும் முல்லாவும்

ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திருடும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா . விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதிபதி கேட்டார் “பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் …?” முல்லா சொன்னார் “காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது ..”நீதிபதி “உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி …?” முல்லா “மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் ” நீதிபதி “அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?” முல்லா ... Read More »

மீன்

மீன்

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார். முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ... Read More »

Scroll To Top