Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 35

கறுப்பு வரலாறு – 35

ரவி ரகுவை போன் போட்டு அழைத்தான். வா நேராக சந்திரசேகரை சந்திப்போம் என்றான்.

நேராக இரவரும் அவர் வீட்டுக் சென்றார்கள்.

வாங்கப்பா உட்காருங்க. என்ன ஆராய்ச்சி முடிக்காம வந்திட்டீங்களா. எங்கே பழனியப்பன் என்றார்.

சார் உங்க கிட்டே நேரடியாக சில கேள்விகளை கேட்கனும்.

சொல்லுப்பா என்றார் சந்திரசேகர்.

சார், நீங்க கொடுத்த ஆராய்ச்சி கட்டுரையில் முதல் 15 பக்கங்கள் எழுதினது யாரு.

அதுவா. என்னுடயை மாணவன் தம்பிரான். நீங்க கூட போய் பார்த்தீங்களே.

அவருடைய இந்த பதில் அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. பொய் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார்கள்.

பின்னே அவரை ஏன் ஆராய்ச்சியை நிறுத்த சொன்னீங்க.

அதுவா. படிக்கிற வயசுல கவனம் சிதறக்கூடாதேங்கறதுக்காக அப்படி சொன்னேன். அவன் எழுதிய கட்டுரை படிச்சிட்டு எனக்கே ஆர்வம் வந்திடுத்து. அப்புறம் அவனை தொடரச் சொன்னேன். ஆனா அவன் விட்டுட்டான்.

சரி. மற்ற பக்கங்களை நீங்க எழுதினீங்களா.

இல்லை. அது ரெயின் ஸ்டுவர்ட் கொடுத்தாரு.

ரெயின் ஸ்டுவர்டா.

ஆமாம்.

அவரை உங்களுக்கு தெரியுமா.

தெரியும் என்னோட தான் வேலை செஞ்சாரு. நான் வேலைக்கு சேர்ந்த புதுசு. அவரு சீனியர். கொஞ்ச கொஞ்சமா வெள்ளைக்காரங்கள் நம்ம நாட்டைவிட்டு போய்கிட்டு இருந்தாங்க. ஆனா பல பேரு இங்கே தங்கிட்டாங்க.

அவரு எழுதினதா.

இல்லை. அவருக்கு ஞானப்ரகாசம் கொடுத்ததா சொன்னாரு. தம்பிரானுக்கும் ஞான ப்ரகாசத்திற்கும் அவரு தான் முதுகலை பாடம் நடத்தினாரு.

அப்ப நீங்க ஒன்னுமே எழுதலையா.

எழுதியிருக்கேன்பா. ஆனா இந்த தலைப்பில இல்லை. இந்த தலைப்பை ஆரம்பத்திலேயே பழனியப்பன் கிட்டே கொடுத்திட்டேன்.

ரெயின் ஸ்டுவர்ட் எதுக்காக உங்க கிட்டே கொடுக்கனும்.

அவரு ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டாரு. அதனால அவரை வேலை விட்டு போகச்சொல்லிட்டாங்க. போகும் போது, இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் கொடுத்திட்டு, இதை கண்டுபிடி, நீ பல கோடிகள் பார்க்கலாம்னு சொல்லிட்டு போயிட்டாரு.

என்ன பிரச்சனை.

அதுவா. அவரு ஒரு பெரிய ரிசர்சர். பல விஷயங்களை கண்டுபிடிச்சிருக்காரு. அப்படி கண்டு பிடிச்ச இரண்டு பழங்கால சிற்பங்களை இங்கிலாந்துக்கு கடத்திட்டதா போலீஸ் புகார் வந்து அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கல்லூரியும் அவரை டிஸ்மிஸ் பண்ணிடுத்து.

சரி. நீங்க எதுக்காக இந்த ஆராய்ச்சியை உங்க பேர்ல பதிவு செஞ்சீங்க.

என்னப்பா சொல்ற. நான் எங்கே பதிவு செஞ்சேன். இது பழனியப்பன் பேர்ல தானே பதிவு செஞ்சேன்.

அதுக்கு என்ன ஆதாரம் உங்ககிட்டே  ரகு கப்பென்று பிடித்துவிட்டதாக நினைத்து ஒரு கேள்வி கேட்டான்.

இருப்பா என்று உள்ளே சென்றவர் ஒரு காகிதத்துடன் வந்தார்.

அதை எடுத்து பார்த்த ரகுவுக்கு ரவிக்கும் ஒரு ஆச்சர்யம். அதில் பழனியப்பன் பெயிரில் இந்த தலைப்பை பதிவு செய்திருந்தார்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம்.

சார். நீங்க லண்டனுக்கு எதாவது போன் செய்ததுண்டா.

ஆமாம்பா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரெயின் ஸ்டுவர்டோட பையன் ஜான் ஸ்டுவர்ட் இந்த ஆராய்ச்சியை தொடர்பவர்களுக்கு பண உதவி செய்வதா விளம்பரும் கொடுத்திருந்தாரு. நானும் உங்க அப்பாவோட வேலை செஞ்சவன்னு சொல்லி பண உதவி கேட்டிருந்தேன். இதுவரைக்கும் 2000 பவுண்ட் வரை உதவி செஞ்சிருக்காரு. இன்னும் செய்யத் தயார்னு சொல்யிருக்காரு. அதை கொண்டு தான் உங்களுக்கெல்லாம் கொடுக்கறேன்.

சார். எங்களுக்கு ஒரு குழப்பமா இருக்கு. இந்த காகிதத்தில் உங்க பெயர் இருக்கு. இதை பார்த்துட்டு தான் சங்கர் பழனியப்பன் கிட்டே சொல்றதுக்கு ஓடி வந்திருக்கான். நீங்கள் துரோகம் செய்திட்டதா நாங்க நினைச்சோம். கரிகாலன் சங்கரை கொன்னுட்டாரு. நீங்க வெச்ச ஆளுதான் கரிகாலன் நினைச்சோம். ஆனா நீங்க சொல்றதை பார்த்தா ஒரே குழப்பமா இருக்கே.

என்ன. கரிகாலன் சங்கரை கொன்னுட்டாரா. என்னப்பா சொல்றீங்க.

ஆமாம் சார். ஆனா ஆதாராம் இல்லாததால அவரை விட்டுட்டாங்க. ஆனால போலீஸ் அவர் பின்னாடி தான் இருக்கு.

கரிகாலனா இப்படி ஒரே குழப்பமா இருக்கு.

சார் அது மட்டுமில்லை நாங்க தேடின மூனு புத்தகத்திலும் சில பக்கங்கள் இல்லை. அது எங்களோட சந்தேகத்தை அதிகமாக்கிடுச்சு.

அப்படியா. எந்த மூனு புத்தகங்கள்.

ஒன்னு ரெயின் ஸ்டுவர்ட் எழுதினது. மத்த இரண்டும் கதிரவன் எழுதினது.

இருங்க. என்கிட்ட அந்த புத்தகங்கள் இருக்கு எடுத்துட்டு வரேன்.

ஆவலாக மாணவர்கள் புத்தகங்களை தேடினார்கள். முதல் புத்தகத்தில் அந்த நான்கு பக்கங்களும் இல்லை. இரண்டாவது புத்தகங்களிலும் அந்த நான்கு பக்கங்கள் இல்லை. மூன்றாவது புத்தகத்தில் பக்கங்கள் இருந்ததை கண்டு ரகு ஆவலாக படித்தான். ஆனால் கிழித்து மறைக்கும் அளவிற்கு சுவையாக ஒன்றும் கிடைக்கவில்லை. அலுத்து போனது போல புத்தகங்களை மேசை மீது எறிந்தான்.

தம்பி, புத்தகங்கள் அச்சடிக்கப்படும் போது பக்கங்களின் எண்கள் மிஸ்ஸாகறது சகஜம் தான். அது மாதிரி நூலகத்தில் உபயோபடுத்தும் புத்தகங்களின் பக்கங்கள் தொலைஞ்சி போறதும், கிழிந்து போகறதும் சகஜம் தான். சங்கர் கொலையான உடனே நீங்கள் எதை எடுத்தாலும் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டீர்கள்.

அப்ப, நீங்க உங்க பேர்ல டாக்டர் பதிவு செஞ்ச மனு பொய்யா என்று ரவி சற்று குரலை உயர்த்தி கேட்டான்.

நான் என் பெயரில் பதிவு செஞ்சேனா எங்க காமிங்க அந்த காகிதத்தை என்று கேட்டார்.

ரவி தயங்கினான்.

கொடுப்பா, நான் கொல்லமாட்டேன். என்னால முடியவும் முடியாது என்றார்.

ரகு தலை அசைக்க ரவி அந்த காகிதத்தை எடுத்து நீட்டினான்.

அந்த காகிதத்தை உற்று பார்த்த அவர் அவர்களுக்கு அதில் ஒரு இடத்தை காட்டினார். அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top