Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 34

கறுப்பு வரலாறு – 34

ஜெயா ரமேஷைப்பார்த்து ஹீத்ரூவிமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் கேட்டாள்.

உங்களோட முடிவு என்ன இந்த கேஸை பொருத்தவரையிலும்.

ஜெயா ஜான் வீட்டிலே கிடைத்த ஆவனங்களை வெச்சி பார்த்தா, நாலு வருஷங்களுக்கு முன்னால அவன் இந்தியாவுடைய முன்னனி பத்திரிக்கைகளில் களப்பிறர் ஆட்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தான் நிதி உதவி செய்ய முன் வருவதாக கூறியிருந்தான். அதில் தான் தமிழ் நாட்டில் பிறந்ததாகவும், அவனுடயை தந்தை ரெயின் ஸ்டுவர்ட் தமிழ் நாட்டில் வாழந்ததாகவும், அவர் களப்பிறர் பற்றி ஆராய்ச்சி செய்வதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும், அவரின் உயிலில் எழுதியவாறு தான் எத்தனை நிதி உதவியும் செய்யத் தயாராக இருக்கிறன் என்றும் அறிவித்திருக்கிறான்.

அதை பார்த்து வந்தவங்கள் தான் இந்த 8 பேரும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்றால் அதிலிருந்த 7 பேருக்கு வெறும் 1000 பவுண்ட் தான் இதுவரையிலும் 4 வருஷத்தில் அவன் அனுப்பியது. ஆனால் சந்திரசேகருக்கு மட்டும் சுமார் 60,000 பவுண்ட்.

இது தான் என் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. சந்திரசேகர் கள்ப்பிறர் காலத்து பொருட்களை தேடி தேடி அதை வெளிநாட்டுக்கு விற்கிறார். அவருக்கு வரும் பணம் வெள்ளை பணமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த ஆராய்ச்சி போர்வை. டாக்டர் பட்டத்திற்கு அவருடைய பெயர் பதிவு எல்லாம்.

களப்பிறர் ஒரு ஊரை பிடித்ததும், அதன் நடுவில் இரண்டு வாள் ஒரு மீனை சூழ்ந்த பாதுகாப்பது போல ஒரு சிலையை வைப்பார்கள். அது ஐம்பொன்னால் ஆன சிலைகள் மட்டும் அல்லாமல் அதில் வைர வைடூரியங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அவர்கள் அந்த ஊரை விட்டுச் செல்லும் போது அதை எடுத்து செல்வார்கள். அதற்கு பிறகு வந்த பல்லவர்கள், தாங்கள் அந்த ஊரை கைப்பற்றியதும் அந்த நினைவுச்சின்னங்களை அங்கேயே புதைத்து அதன் மேல் தங்கள் ஸ்தம்பங்களை வைத்தார்கள்.

களப்பிறர் ஆராய்ச்சி செய்பவர்கள் அவர்கள் எந்தெந்த இடத்தில் இருந்தார்கள் என்று தெரிந்தாலே போதும், அந்த சிலைகள் எடுக்க வசதியாக இருக்கும். ஆனால் பல இடங்களிலும் இப்போது மனிதர்கள் இருப்பதால் மிகவும் கடினம். ரெயின் ஸ்டுவர்ட் அப்படிப்பட்ட இரண்டு இடங்களை கண்டுபிடித்துவிட்டார். அவர் காலத்திலேயே அதை இங்கிலாந்துக்கு எடுத்துக் கொண்டு போய்விட்டார். அவருடயை இந்த நடவடிக்கை தெரிந்ததும் அவரை இந்தியாவில் வேலை விட்டு எடுத்துவிட்டனர். அவரும் தன் குடும்பத்துடன் இங்கிலாந்து வந்துவிட்டார்.

இப்போது தான் அந்த பெரும் புதையல் ரகசியத்தை அறிந்த அவர் பிள்ளை மீண்டும் இதை தொடர்ந்திருக்கிறான். இவன் அனுப்பிய பணத்தை வைத்து பார்த்தால் குறைந்தது மேலும் 2 சின்னங்களாவது கிடைச்சிருக்கும். இந்த சின்னத்தின் உண்மையான மதிப்பை அறியாமல் சொற்ப காசுக்கு விற்றுவிட்டார் சந்திரசேகர். ஒவ்வொரு சின்னமும் ஒரு வருட தமிழக பட்ஜெட்.

அப்ப ரெயின் ஸ்டுவர்ட் தான் ஞானப்ரகாசத்தை தாக்கியிருக்கனும். சரிதானே.

ஆம். 30 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஞானப்ரகாசத்தை தாக்கி அந்த காகிதங்களை எடுத்திருக்கிறார். பிறகு இங்கிலாந்து போய் பல வருடங்களுக்கு பின்தான் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவ்வளவு தானே கதை. நேராக ஊருக்கு போய் சந்திரசேகரை கைதி பண்ணவேண்டியது தானே.

இல்லை ஜெயா. அவ்வளவு சுலபம் இல்லை. அதில் தான் க்ளைமாக்ஸே இருக்கிறது. பாரு என்றான் அவளை பார்த்து கண்ணடித்தபடியே.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top