Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 17

கறுப்பு வரலாறு – 17

ரமேஷ் இரண்டாவது நாளே சென்னை கிளம்பினான். பழனியப்பனுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான் மாணவர்களை. தம்பிரானையும் ஞானப்ரகாசத்தையும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தான். காவல் துறை இந்த விவகாரத்தில் நுழைந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்று பார்த்துக் கொண்டான். கரிகாலன் விஷயமும் பத்திரிகை துறைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

அடுத்து சந்திரசேகர் என்று சொல்லிக் கொண்டான்.

வீட்டுக்கு வந்ததும் மாடிக்குச் சென்று திறந்தவெளி நீச்சல் குளத்தில் குளித்தான். படுக்கையறைக்கு வந்து ஜெயாவின் தோள்களில் சாய்ந்தான்.
காகிதங்கள் என்ன சொல்லுது.

இது என்னோட யூகம். முதல்ல என்னோட யூகத்தை சொல்றேன். அப்புறம் நான் படிச்சதை சொல்றேன்.

ஷூட் என்று தலையணயை எடுத்து அணைத்துக் கொண்டே ஆர்வமாக கேட்டான்.

1.வெள்ளைக்கார்ர்கள் இதில் இன்வால்வ் ஆகியிருக்காங்கன்னு வெச்சிப்போம். நம்ம ஃபோகஸ் லண்டனுக்கு போகுது.

2.ஒரு இரண்டு பேர்ல நம்பிக்கை வெச்சி இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டாங்க. குறைஞ்சது 10 பேரையாவது தனித்தனியா இந்த வேலையை செய்யச் சொல்லியிருப்பாங்க. அது தான் அவங்களோட அணுகுமறை. அப்படின்னா அந்த 10 பேர் யாருன்னு கண்டுபிடிக்கனும். இது தமிழக வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்கறதால தமிழ் நாட்டுக்கு தமிழ் நாட்டிலிருந்து லண்டனுக்கு போன வந்த தொலைபேசி கால்களை டிராக் பண்ண்னும். ஒரு குறிப்பிட்ட எண்களை டிரேஸ் பண்ணா யாரு இந்த ஆராய்ச்சிக்கு பணம் கொடுக்கறாங்கன்னு தெரிஞ்சிடும்.

3.இந்த விஷயம் தெரியாம இருக்கறதுக்கு கொலைகளும் நடந்திருக்கலாம்.

4.இதுவரைக்கும் யாருக்குமே இந்த ரிசர்ச்சில் வெற்றி அடைஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா களப்பிறர் ஆட்சி 50 சதவீதம் கட்டுக் கதை, 50 சதவீதம் தான் உண்மையாக இருக்கலாம். அதுக் கூட சந்தேகம் தான்.

என் புத்திசாலி பெண்ணே என்று சொல்லி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். பல பேர் பல நாட்கள் சேகரித்த விஷயங்களை தன் மனைவி இரண்டு நாட்களில் செய்ததை எண்ணி வியந்தான். இவளை மனைவியாக பெற நான் என்ன தவம் செய்தேன் என்று சொல்லிக் கொண்டான்.

சரி. உன் யூகத்திற்கு என் பதில்கள்.

1. ஆமாம். லண்டன் டிரிப் தேவைப்படும்
2. அந்த 10ல ஒரு ஆள் சந்திரசேகர்.
3. ஆமாம். எனக்கு தெரிஞ்சு ஒரு கொலை நடந்துடுத்து. சங்கர் அப்படிங்கற ஒரு ரிசர்ச் மாணவன்.
4. ஆமாம். அதனால தான் ஆங்கிலேயர் போன 50 வருஷம் ஆகியும் இது இன்னும் வெற்றியடையாம நடந்துக் கொண்டிருக்கிறது.

அது சரி. உன் யூகம் சரிதான். நீ படிச்ச விஷயங்களை பத்தி சொல்லு.

ரமேஷ், இதுவரைக்கும் கொள்ளையடிச்சவங்க மலைகளிலும் பூமிகளிலும் காடுகளிலும் தான் புதைச்சு வச்சிருக்காங்க. ஆனா களப்பிறர்கள் அப்படி செஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அவங்க கடல் வழியாக வந்தவர்கள். என்னுடைய கருத்துப்படி அவர்கள் இந்தியர்களா கூட இருக்க வாய்ப்பில்லை.

அவங்க தமிழ்நாட்டை அட்டாக் பண்ணதால அவர்கள் வங்காளக் கடல் அல்லது இந்திய மகாசமுத்திரம் வழியாக வந்திருக்கனும். ஜாவா சுமத்திராவிலேர்ந்து கூட இருக்கலாம்.
அதனால அவர்கள் கடலுக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் நுட்பமோ இல்லை அருகாமையில் இருக்கும் தீவுகளிலோ இருக்க வேண்டும். தண்ணீருக்குள் எப்படி ஒளித்து வைக்கு முடியும்.

அப்படி ஒளித்து வைத்தால் இது நாள் வரை எப்படி தாக்கு பிடிக்கும். பாதாள உலகம் ஒரு வேளை நிஜமான கருத்தா. புராணங்கள்ல தண்ணிக்குள்ளேயே அரண்மனை இருந்ததா எல்லாம் சொல்றாங்க. அதெல்லாம் உண்மையா. இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலை.

அவள் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு அவள் தன் அகலமான கண்களை விரித்து உற்சாகமாக பேசியதை கேட்டுக் கொண்டிருந்தான்.

சரி நீங்க போயிட்டு வந்த்தை பத்தி சொல்லுங்க.

ம்ம். சரி சொல்றேன் என்று ஆரம்பித்தான்.

பழனியப்பன் அவர் குரூப்போட சிதம்பரம் போய் பாத்திருக்காரு. தம்பிரானை இந்த சந்திரசேகர்தான் களப்பிறர் பத்தி ஆராய வேண்டாம்னு சொல்லியிருக்காரு. ஆனா சந்திரசேகர் எழுதின ஆய்வு கட்டுரையில் முதல் 20 பக்கமும் வரிக்கு வரி தம்பிரான் எழுதினது தான்.
அவள் கண்கொட்டாமல் அவனை பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஞானப்ரகாசம் இந்த தலைப்பை எடுத்து ரொம்ப நாளா ஆராய்ச்சி செஞ்சிருக்காரு. அவரை வேலை செய்யவிட்டு அப்புறமா அடிச்சி அவர்கிட்டேர்ந்து வேலையை பிடிங்கிட்டாங்க. சந்திரசேகரோட மத்த பக்கங்கள் எல்லாம் ஞானப்ரகாசத்துடையது. ஆக அவரா ஒரு வரிக்கூட எழுதலை. அப்படி எழுதியிருந்தா கூட அதை இவங்க கிட்டே கொடுக்கலை.
சங்கரை எதுக்காக கொன்னாங்க.

அது தான் சுவாரஸ்யமான விஷயம். சந்திரசேகர் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டிலே இந்த தலைப்பை தன் பேர்ல பதிச்சிருக்காரு. அதோட நகல் அவர் கொடுத்த பக்கங்களோட பழனியப்பன்கிட்டே வந்துடுத்து. பழனியப்பன் பசங்க கிட்ட பக்கங்களை பிரிச்சு கொடுத்து படிக்க சொல்லியிருக்காரு. முதல் நாள்லயே சங்கர்கிட்ட அந்த நகல் மாட்டிடுச்சு. அதை சொல்லத்தான் அவன் வந்திருக்கான். வழியில கரிகாலன்கிட்ட சொல்லியிருக்கான். அவரு அவனை அடிச்சுப்போட்டுட்டு எங்கேயாவது கொண்டு போய் மிரட்டி மசிய வைக்கலாம்னு நினைச்சிருக்கலாம். இல்லை கொன்னு போடனும்னே அடிச்சிருக்கலாம்.

அந்த பக்கங்கள் என்னாச்சு.

சிதம்பரம் போலீஸ் அதிகம் விசாரனை செய்யலை. அதனால கொஞ்சம் அலட்ச்சியமாகவே இருந்துட்டாரு கரிகாலன். சுமோவோட டூல்கிட் பாக்ஸல இந்த பேப்பர்ஸ் கிடைச்சிது.

அப்ப சங்கரோட பர்ஸ் பணம்.

அது ஒரு வேளை கிராம ஜனங்க எடுத்திருக்கலாம். சொல்ல முடியலை.
அது சரி இதுவரை சுமார் 100 பக்கம் ஆராய்ச்சி கட்டுரை சேர்ந்தாச்சே. அதை படிச்சீங்களா.

அதை அரைமணி நேரத்துல படிச்சிட்டேன். ஆனா பொறுமையா படிக்கனும் அதனால பென்ஸ்கானர்ல ஸ்கேன் பண்ணி எடுத்துட்டு வந்திருக்கேன். உனக்கு தரேன்.
படிச்ச வரைக்கும் என்ன புரிஞ்சு உங்களுக்கு.

ஹாஹா. என் பெண்டாட்டியை விட புத்திசாலி உலகத்திலே இல்லை அப்படின்னு தெரிஞ்சுது என்று அவளை அணைத்து அவள் காதை கடித்தான்.
விடுங்க. சொல்லுங்க என்ன இருந்துது.

நீ சொன்ன எல்லம் இருந்துது. அதுக்கு மேலேயும் இருந்தது.

அதான் கேட்கறேன். சொல்லுங்க.

எல்லாம் இன்னிக்கே கேட்கனுமா.

ஆமாம்.

சரி என்று சொல்லி விவரிக்க ஆரம்பித்தான். கேட்க கேட்க அவள் வியந்தாள். வானம் இருட்ட தொடங்கியது. வானம் கறுப்பு அங்கியை அணிந்து நின்றது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top