Home » அதிசயம் ஆனால் உண்மை » பொது அறிவு » அருங்காட்சியகத்தில் கலிலியோவின் விரல்.!

அருங்காட்சியகத்தில் கலிலியோவின் விரல்.!

இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்ட மேதை கலிலியோ கலிலி. இவர் நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். கலிலியோ பற்றிய சுவாரசியமான தகவல்கள் பல உள்ளன. பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ.

ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான் பின்னாளில் வந்த இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது.

இத்தாலியிலுள்ள பைசா நகர பல்கலைக்கழகத்தில் கலிலியோவுக்கு கணித பேராசிரியராக வேலை கிடைத்தது. ஆனால் தனது ஆராய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவரை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கி விட்டனர்.

கண்ணாடி பிம்பம், மெழுகுவர்த்தி மூலம் ஒளியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம், பாக்கெட்டில் வைக்கும் சீப்பு, நீஃபில் பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு, கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.

தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கான் சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ, 1633 ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். 1638ம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.

கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top