Home » அதிசயம் ஆனால் உண்மை » பொது அறிவு » தெரிந்து கொள்வோம் சில கண்டிபிடிப்புகள் உருவான கதை !!
தெரிந்து கொள்வோம் சில கண்டிபிடிப்புகள் உருவான கதை !!

தெரிந்து கொள்வோம் சில கண்டிபிடிப்புகள் உருவான கதை !!

காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு ‘வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் ‘வல்க்ரோ’வுக்கு உண்டு.

சோப்

குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.

சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.

‘டூத் பிரஷ்’

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top