Home » தன்னம்பிக்கை (page 15)

Category Archives: தன்னம்பிக்கை

நம்பிக்கையை விடவே விடாதே!

நம்பிக்கையை விடவே விடாதே!

ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பது என்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும். மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் ... Read More »

தரை துடைக்கும் வேலை

தரை துடைக்கும் வேலை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. ... Read More »

நம்மால் முடியும்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு ” ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு இவர் ” எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது ... Read More »

வருவது வரட்டும் சமாளிப்போம்

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. ... Read More »

வாழ்க்கை

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள். ”தாத்தா… கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன். ”அடே பையா… வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!” சிரித்தார் தாத்தா. ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது ... Read More »

முயற்சி

முயற்சி

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.  கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.  வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது. Read More »

கான்ஃபிடன்ஸ் கார்னர்

கான்ஃபிடன்ஸ் கார்னர்

பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் எல்லோரும்!! Read More »

கான்பிடன்ஸ் கார்னர்

கான்பிடன்ஸ் கார்னர்

சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது.             அதனை கிரகங்கள் சுற்றுகின்றன. நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக்கொள்வார்கள். உண்மையில் கிரகங்கள் சுழல்கின்றன. ஆனால் சூரியன் உதிக்கிறது; அஸ்தமிக்கிறது என்கிறார்கள். தான் இயங்காமல் பிறரை இயக்கி அதிலும் தன் இயக்கத்தை வெளிப்படுத்தும் சூரியனின் இயல்பே தலைமைப் பண்பின் அடையாளம்” என்றார் அவர். Read More »

Scroll To Top