அமானுஷ்யன் – 94

அந்தக் கட்டிடத்திற்கு அருகே இருந்த தெருவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு சிறிது தூரம் தள்ளி அரையிருட்டில் ஒரு காரும் அதன் பின்னால் சிறிது தூரம் தள்ளி ஒரு போலீஸ் ஜீப்பும் நின்று கொண்டிருந்தது. ஆனந்த் முணுமுணுத்தான். “அவர்கள் முன்பே வந்து தயாராக நிற்கிறார்கள்” டாக்சி நின்றதும் இருவரும் இறங்கினார்கள். பணத்தைத் தந்தவுடன் டாக்சி திரும்பவும் வந்த வழியே திரும்பிப் போனது. இருவரும் அமைதியாகக் காத்திருந்தார்கள். போலீஸ் ஜீப்பில் மறைவாக உட்கார்ந்திருந்த ராஜாராம் ரெட்டி செல் போனில் ... Read More »

அமானுஷ்யன் – 93

ராஜாராம் ரெட்டியால் அன்றிரவு உறங்க முடியவில்லை. அரை மணி நேரத்திற்கொரு முறை அந்தக் கட்டிடத்தின் சுற்றுப் புறத்தில் நிறுத்தி வைத்திருந்த ஆட்களிடம் போன் செய்து பேசினார். ஏதாவது சந்தேகப்படும் படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றதா என்று கேட்டார். ஒன்றுமில்லை என்ற பதில் வந்த போது அதை அவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. குடைந்து கேட்ட போது அன்று இருவேறு சமயங்களில் இரண்டு இளைஞர்கள் அந்த வழியாக ஸ்கூட்டரில் போனார்கள் என்று தெரிந்தது. அவர்கள் அந்த கட்டிடத்தைப் பார்த்தபடி நின்றார்கள் ... Read More »

அமானுஷ்யன் – 92

ஆனந்தும் மகேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘நான் சமாளித்துக் கொள்வேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்’ என்று அக்‌ஷய் சொன்ன விதத்தைப் பார்த்தால் அவன் தன் மரணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதாகவே அவர்களுக்குப் பட்டது. ஆனால் அவர்களை அதைப் பற்றி மேலே யோசிக்க விடாமல் அக்‌ஷய் சொன்னான். “நமக்கு இப்போது முதல் பற்றாக்குறை நேரம் தான். அதனால் அதை வீணாக்காமல் அடுத்ததாக நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்போம்” ஆனந்த் சொன்னான். “எனக்கு மிஸ்டர் எக்ஸ் ... Read More »

அமானுஷ்யன் – 91

ராஜாராம் ரெட்டியின் முகத்தில் பேயறைந்த களை தெரிந்தது. மந்திரி தன்னை மிரட்டுகிறாரா இல்லை நிஜமாகவே தான் நினைப்பதைச் சொல்கிறாரா என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை. மந்திரி தாழ்ந்த குரலில் சொன்னார். “அவர்கள் நமக்கு பணம் நிறையவே தந்திருக்கிறார்கள். வாங்கிய பணத்திற்கு அவனைப் பிணமாக ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இல்லா விட்டால் அவனுடைய அம்மாவையும், அந்தப் பையனையுமாவது ஒப்படைக்கச் சொல்கிறார்கள். அப்படி செய்யா விட்டால் அவர்கள் எதிரிகள் பட்டியலில் நம் பெயர் தான் முதலிடத்திற்கு வரும் என்கிறார்கள். ... Read More »

அமானுஷ்யன் – 90

“தெரியவில்லை. ஆனால் அந்தப் பெயரில் பேச எழுந்தது நான் தான்” “என்ன பேசினாய் என்பது நினைவுக்கு வரவில்லையா?” அக்‌ஷய் இல்லை என்று தலையசைத்தான். திரும்பவும் அந்த அறிவிப்பை எண்ணிப் பார்த்தான். “நம் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரும், சிறந்த பேச்சாளருமான அப்துல் அஜீஸ் அவர்களை பேச அழைக்கிறேன்”. அது என்ன இயக்கம்? யாரந்த அப்துல் அஜீஸ்? வேறொரு ஆளின் இடத்தில் அவன் ஏன் பேசப் போனான்? ஏன் அவன் அப்துல் அஜீஸ் அல்ல என்பதை மற்றவர்கள் கண்டு பிடிக்கவில்லை? ... Read More »

அமானுஷ்யன் – 89

குறுந்தாடிக்காரன் கதவைத் தட்டியவுடனே அந்த அறைக் கதவு திறக்கப் படவில்லை. மாறாக பக்கத்து அறைக் கதவு திறந்து ஒரு ஆள் எட்டிப் பார்த்தான். பின் கதவை மறுபடியும் கதவை மூடிக் கொண்டான். ஒரு நிமிடம் கழித்து தான் தட்டிய அறைக்கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த ஒரு ஆள் அவனை உள்ளே விட்டு வெளியே கதவைத் தாழிட்டுப் போய் விட்டான். தாடிக்காரனுக்கு பயத்தில் குப்பென்று வியர்த்தது. பக்கத்து அறையிலும் அவர்கள் ஆட்களே இருப்பது புரிந்தது. வந்துள்ளது அவன் தானா ... Read More »

அமானுஷ்யன் – 88

ஆனந்தின் செல்போன் இசைத்தது. ஒரு கணம் தம்பியின் தியானம் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்று ஆனந்த் பயந்தான். ஆனால் அதற்கு அவசியமே இருக்கவில்லை. அக்‌ஷயை அந்த சத்தம் சிறிதும் பாதிக்கவில்லை. அவன் அப்படியே அசைவற்ற நிலையிலேயே இருந்தான். ஆனந்த் அவசரமாக செல்போனை எடுத்துப் பேசினான். ”ஹலோ” ராஜாராம் ரெட்டியின் குரல் கேட்டது. “ஹலோ ஆனந்த், நான் ராஜாராம் பேசுகிறேன்” “சொல்லுங்கள் சார்” ”நீயும் உன் தம்பியும் எப்போது வருகிறீர்கள்? எங்கே சந்திக்கலாம்?” ஆனந்த் சொன்னான். “இப்போது வர முடியாத ... Read More »

அமானுஷ்யன் – 87

ஆனந்த் சொன்னான். “சொல்லுங்கள்” ”நான் சொல்கிற இடத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன மிஸ்டர் எக்ஸ் டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பிரியும் ஒரு சாலையைக் குறிப்பிட்டு அதில் சுமார் ஏழு கிலோமீட்டர் பயணம் செய்தவுடன் ஒரு புதிய வணிக வளாகம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருக்கும் என்று சொல்லி அதை மேலும் சிறிது விவரித்தார். பின் தொடர்ந்தார். “…. அங்கு வேறெந்த பெரிய கட்டிடமும் கிடையாது. அதனால் அதைக் ... Read More »

அமானுஷ்யன் – 86

தம்பியின் அந்த திடீர் மாற்றம் ஆனந்தை பயமுறுத்தியது. மறுபடியும் நினைவுகள் எல்லாம் போய் விட்டனவோ என்று எண்ணியவனாக அக்ஷயைத் தொட்டு லேசாக உலுக்கியபடி கேட்டான். “அக்ஷய்.. அக்ஷய்… என்ன ஆயிற்று?” அக்ஷய் கனவில் இருந்து விழித்தவன் போல விழித்தான். அவனுக்கு சுயநினைவுக்கு வர சில வினாடிகள் தேவைப்பட்டன. ஆனந்த் கவலையுடன் கேட்டான். “அக்ஷய் என்ன ஆயிற்று?” அக்ஷய் தன் காதில் ஒலித்த அந்த வாசகங்களையும், அதற்குப் பின் கேட்ட கைதட்டல்களையும் பற்றி சொன்னான். ஆனந்த ஆர்வத்துடன் கேட்டான். ... Read More »

அமானுஷ்யன் – 85

ராஜாராம் ரெட்டி பயபக்தியுடன் நீட்டிய அந்த பிரசாதத்தை ஜெயின் பார்த்தார். பார்க்க பஞ்சாமிர்தமாகவும் இல்லாமல், அல்வா போலவும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு நிலையில் அந்த பிரசாதம் இருந்தது. வாங்கிய ஜெயின் காளிதேவியை நினைத்து வணங்கியபடி அந்த பிரசாதத்தை எடுத்து வாயில் கண்களை மூடிப் போட்டுக் கொண்டார். சுவை என்னவோ போல் இருப்பதை ஜெயின் உணர்ந்தார். அந்த சுவையால் ஜெயின் முகம் ஒரு மாதிரியாகப் போனதைக் கவனித்த ரெட்டி அவர் அதைத் துப்பி விடப் போகிறாரோ என்று பயந்தார். ... Read More »

Scroll To Top