Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை (page 5)

Category Archives: தொடர் கதை

பண்டைய நாகரிகங்கள் – 3

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு, பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நாம் இன்று ஏற்றுக்கொண்டுள்ள அறிவியல் கொள்கை பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory). உங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்ட வெளியை ஒருமுறை நன்றாகக் கவனியுங்கள். பார்த்துவிட்டீர்களா? இப்போது கண்களை மூடுங்கள். திறங்கள். இந்தக் ‘கண் சிமிட்டும் நேரம்’ சுமார் ஆறு விநாடிகள். இப்போது மறுபடியும், உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்டவெளியை உற்றுக் கவனியுங்கள். வித்தியாசம் தெரிகிறதா? என்ன, ஒரு வேற்றுமையும் தெரியவில்லையா? நீங்கள் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 2

முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் பிறந்த கதைகளைப் பார்த்தோம். கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் புராதனக் கதைகள் ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிரபஞ்சம் பிறந்ததாகச் சொல்கின்றன. கிரேக்கம் கிரேக்கம் சொல்லும் கதை இது. முதலில் எங்கும் வெட்ட வெளி. அதைச் சுற்றிப் பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தாள் ஓஷனஸ் (Oceanus) என்னும் கடல் தேவதை. அவளுக்கும், வடக்குக் காற்றுக்கும் காதல் வந்தது. இணந்தார்கள். ஈரினோம் (Eurynome) என்னும் பெண் குழந்தை பிறந்தது. ஈரினோம் காதல் கடவுள். தன் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 1

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள்.  இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய்  வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி.     ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 37

ஒரு நகரத்தின் கதை – 37

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ என்ற மாத இதழ் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அதன் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகர் என்னிடம் சிங்கப்பூர் தொடர்பாக ஏதாவது தொடர் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதும் சிங்கப்பூரில் இருக்கும் கட்டடங்களைப் பற்றி எழுதுகிறேன் என்று சற்றும் யோசிக்காமல் சொல்லி விட்டேன். சிங்கப்பூரின் கட்டுமானத் தொழில், சிங்கப்பூரில் இருக்கும் கட்டடங்களைப் பற்றிய பிரமிப்பு குறையாமல் இருந்தபடியால் அப்படிச் சொல்லிவிட்டேன். அவர் சற்றுத் தயங்கி சிங்கப்பூரில் இருக்கும் சாலைகளில் சில ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 36

ஒரு நகரத்தின் கதை – 36

சிங்கப்பூரை மலேயாவுடன் இணைப்பதில் மலேயாத் தலைவர்கள் உடன்படாமல் இருந்ததற்கு மக்கள் செயல் கட்சி இடது சாரி கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தது என்று நினைத்தது மட்டும் காரணமல்ல. சிங்கப்பூரில் வாழ்ந்த மக்களில் 70% மேல் சீனர்கள். இந்த நிலையில் சிங்கப்பூரை மலேயாவைச் சேர்ந்த மாநிலங்ககளில் ஒன்றாகச் சேர்த்தால் சீன இனத்தவரைப் பெருவாரியாகக் கொண்ட மாநிலமாக அமையும். சீன இனத்தவரைப் பெரும் பான்மையினராகக் கொண்ட ஒரு மாநிலம் அமைவது மலேசியாவுக்குள் ஒரு கம்யூனிஸ மாநிலம் உருவாகலாம் என்ற அச்சம். 1961 ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 35

ஒரு நகரத்தின் கதை – 35

திரு.டேவிட் மார்ஷல் மாணவர்களுடனும்,தொழிலாளிகளுடனும் ஏற்பட்ட முரண்பாடுகளால் மட்டும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை. காலனி ஆட்சியாளர்களுடன் எப்போதும் முரண்பட்டு நின்றார். ஆங்கிலேய ஆளுநரால் தான் கட்டுப்பட்டு இருப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க முயன்றார். தன்னுடைய தனித்தன்மையால் சிறந்த ஆட்சியாளர் என்ற பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களைச் செயலாக்க முயன்றார். அப்போதைய ஆளுநர் சர் ராபர்ட் பிளாக், டேவிட்மார்ஷல் இன்னும் கூடுதலாக நான்கு உதவி அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார். ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 34

ஒரு நகரத்தின் கதை – 34

ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பல புதிய கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கின. மிகவும் பரபரப்பாக நடைபெற்றத தேர்தலில்  எஸ். பி. பி. என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூர் ப்ரொக்ரெசிவ் கட்சி (சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி) படுதோல்வி அடைந்தது. இதற்கு முன்னால் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில்  சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மூன்று இடங்களை வென்றது. மற்ற மூன்று இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 33

ஒரு நகரத்தின் கதை – 33

1953 ஆம் ஆண்டு காலனி அரசாங்கம், சர் ஜியார்ஜ் ரெண்டல் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை உருவாக்கியது. இந்த குழு சிங்கப்பூரை முழுமையாக தன்னாட்சி பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முனைந்தது. சிங்கப்பூர் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களை மறு பரிசீலனைச செய்தது. சிங்கப்பூர் தன்னிறைவு பெற்று தனித்து இயங்கக்கூடிய நிலையில் இருந்தால் மற்றும் சிங்கப்பூர் ஒரு பெரிய நாட்டுடன் இணைந்து செயல்படும் அளவிற்கு முழுமையாக வளர்ச்சியடைந்திருந்தால் அதற்குத் தன்னாட்சி வழங்கலாம். அது முழுமையான தன்னாட்சியாக இல்லாமல் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 32

ஒரு நகரத்தின் கதை – 32

சிங்கப்பூரில் மிகப்பெரிய இனக்கலவரம் நடப்பதற்குக் காரணமான பெண் மரியா என்ற நதிரா இந்தக் கலவரங்கள் நடந்தபோது எங்குஇருந்தாள்? என்ன ஆனாள்? கலவரங்கள் தொடங்கியவுடன் பெரிய கூட்டம் மரியா இருந்த கன்யாஸ்திரிகள் மடத்திற்குள் நுழைய முயற்சித்தது. ஆனால் காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளே நுழைய விடவில்லை. யார்க்ஹில்லில் இருந்த பெண்கள் காப்பகத்திற்கு மரியாவை அனுப்ப முயற்சித்தனர். அதுவும் நடக்காமல் சிங்கப்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்த செயிண்ட் ஜான்ஸ்தீவுக்கு அனுப்பினர். பின்னர் மறுநாளே அடிலைனுடன் மரியா நெதர்லாண்ட்ஸுக்கு ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 31

ஒரு நகரத்தின் கதை – 31

நாதிரா என்பது மரியாவுக்கு அமீனா வைத்தபெயர். அடிலைன் ஹெர்டோக் ஜப்பானியப் படைகளால் பிடிக்கப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது தன் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பும்படி அம்மாவிடம் சொன்னாள். அவள் அம்மா மற்ற எல்லாக் குழந்தைகளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள். ஆனால் மரியா அமீனாவுடன் இன்னும் சிறிது நாள்கள் இருந்து விட்டு வருவாள் என்று சொன்னதை நம்பினாள். ஆனால் அவள் அதன் பிறகு விடுதலை ஆகி வெளியே வரும் வரை மரியா வரவில்லை. விடுதலை ஆகி வெளியே வந்ததும் ... Read More »

Scroll To Top